உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு

ரோடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ரோடு பணிகளை கண்காணிப்பு குழு பொறியாளர் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.முதுகுளத்துாரில் இருந்து உத்திரகோசமங்கை ரோட்டில் இருந்து மட்டியரேந்தல் முதல் மல்லல் வரை 20204--25ம் ஆண்டு புதிதாக ரோடு அமைக்கப்பட்டுள்ளது.முதுகுளத்துாரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 2024--25 நிதியாண்டில் 2.8 கி.மீ.,க்கு ரூ.4 கோடியே 35 லட்சத்தில் அகலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இப்பணிகளை கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.இதில் புதிதாக அமைக்கப்பட்ட ரோட்டின் அகலம், தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பரமக்குடி நெடுஞ்சாலைத்துறை நபார்டு கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், தர கட்டுப்பாடு அலகு உதவி கோட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை