உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு தயாராகும் அலுவலர்கள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு தயாராகும் அலுவலர்கள்

திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தயராகி வருகின்றனர். திருவாடானை சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 971 ஆண்கள், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 311 பெண்கள், 3 திருநங்கைகள் என 3 லட்சத்து 18 ஆயிரத்து 37 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இத் தொகுதியில் 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. பீஹாரை தொடர்ந்து நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை அக்.,ல் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சம்பந்தமாக நேற்று திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இது குறித்து தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது: சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்கள் தேர்தலில் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அக்., முதல் தீவிர வாக்காளர் திருத்தப்பணிகளை துவங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி திருவாடானை சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, பிழையின்றி உருவாக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் வகையில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை