மூதாட்டி தற்கொலை..
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே புதுக்காடு பகுதியை சேர்ந்த மூதாட்டி காளியம்மாள் 65, வீட்டில் தனியாக வசித்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்த நிலையில் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இது குறித்து திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.