உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

ராமநாதபுரம்; ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. திருவோணம் திருநாளை கொண்டாடும் விதமாக மலர்களால் வண்ணக் கோலமிட்டு, கேரள உடையணிந்து நடனமாடி மாணவிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கேரள பாரம்பரிய நடனங்களான திருவோண நடனம், மோகினியாட்டம், செண்டை மேளம் உள்ளிட்டவை இடம்பெற்றன. பல்வேறு விதமான உணவு வகைகளைக் காட்சிப்படுத்தினர். இவ்விழாவிற்கு கல்லுாரி செயலாளர் சகுந்தலா பார்த்தசாரதி தலைமை வகித்தார். முதல்வர் ரஜனி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கல்லுாரி தாளாளர் மனோகரன் வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை