உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கார் மோதி ஒருவர் பலி; 11 பேர் காயம் முன்விரோதம் காரணமா என விசாரணை

கார் மோதி ஒருவர் பலி; 11 பேர் காயம் முன்விரோதம் காரணமா என விசாரணை

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே கார் மோதியதில் 11 பேர் காயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரத்தைச்சேர்ந்த மனோகரன் மகன் ராமநாதபிரபு 30. இவர் ராமநாதபுரம் அருகே தெற்கு தரவையில் உள்ள மாமனார் வீட்டிற்கு நேற்றிரவு காரில் வந்துள்ளார். இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இதே ஊரைச்சேர்ந்த சிலர் சாலை ஓரத்தில் நின்றிருந்தனர். இவர்கள் மீது காரை கொண்டு ராமநாதபிரபு வேண்டுமென்றே மோதினார். இதில் படுகாயமடைந்த சாத்தையா 55, மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.காயமடைந்த உதயபிரகாஷ் 21, சுதர்சன் 18, தீனதயாளன் 18, பி.சுதர்சன் 20, முத்துக்குமார் 19, பழனிக்குமார் 30, சிவா 35, மனோஜ் 24, பிரசாத் 23, ரித்திக்குமார் 19, தேவேந்திர சூர்யா 25, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்ய திட்டமிட்டு காரைக் கொண்டு மோதி உள்ளார் எனவும், சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி சிகிச்சை பெறுவோரின் உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனிடையே ராமநாதபிரபுவை கைது செய்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ