உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காரை கொண்டு மோதியதில் ஒருவர் பலி; 11 பேர் காயம்

காரை கொண்டு மோதியதில் ஒருவர் பலி; 11 பேர் காயம்

ராமநாதபுரம்:பரமக்குடி அருகே நின்றிருந்தவர்கள் மீது காரை கொண்டு மோதியதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 11 பேர் காயம் அடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்த மனோகரன் மகன் ராமநாதபிரபு, 30, என்பவர், ராமநாதபுரம் அருகே தெற்கு தரவையில் உள்ள மாமனார் வீட்டிற்கு நேற்றிரவு காரில் வந்தார். இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த சிலர் சாலை ஓரத்தில் நின்றிருந்தனர். அப்போது, அவர்கள் மீது காரை கொண்டு ராமநாதபிரபு வேண்டுமென்றே அதி வேகத்தில் மோதினார். இதில் காயமடைந்த சாத்தையா, 55, மதுரை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த உதயபிரகாஷ், 21, சுதர்சன், 18, தீனதயாளன், 18, பி.சுதர்சன், 20, உட்பட 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக ராமநாதபிரபுவை கைது செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக கொலை செய்ய திட்டமிட்டு வேண்டுமென்றே காரை கொண்டு மோதினாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி