ஒருவர் பலி
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 45. இவர் நேற்று மதியம் 3:00 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து டூவீலரில் ஊருக்கு சென்றார். கிழக்கு கடற்கரை சாலையில் திருப்புல்லாணி செல்லும் வழியில் ஐந்திணை மரபணு பூங்கா அருகே எதிரில் வந்த கார் நேராக மோதியதில் சம்பவ இடத்தில் முத்துக்குமார் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.