உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர்

ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர்

திருவாடானை : அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாணவராக குறைந்து இந்த ஆண்டில் ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளியாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே காட்டியனேந்தல் பள்ளி திகழ்கிறது.கோடைவிடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் தொடங்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாரத்தில் 77 அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் 112 உள்ளன.திருவாடானை அருகே காட்டியனேந்தலில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் பணியாற்றுகிறார்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பள்ளி 30 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். தற்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக படிப்படியாக குறைந்து ஒரு மாணவர் மட்டும் படிக்கிறார். அந்த மாணவருக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்துகிறார்.இந்த மாணவருக்கு காலை உணவு பிள்ளையாரேந்தல், மதிய உணவு குஞ்சங்குளம் பள்ளிகளில் இருந்து கொண்டு வந்து கொடுக்கப்படுகிறது. இங்குள்ள சமையல் கூடம் காட்சிப் பொருளாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ