குளம் அருகே உடலை புதைக்க எதிர்ப்பு
திருவாடானை: மாணவனின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்தனர்.திருவாடானை அருகே அரியப்புவயல் கிராமத்தை சேர்ந்தவர் லீமன்ராஜ் 21. புதுக்கோட்டை தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ. முன்றாம் ஆண்டு படித்தார். அங்கு பல்வேறு காரணங்களால் அவர் எலிபேஸ்டை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் அரியப்புவயலுக்கு கொண்டு வரப்பட்டது. அவரின் உடலை அங்குள்ள குளம் அருகே புதைக்க சென்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.குடியிருப்பு பகுதியாக உள்ளதால் இங்கு புதைக்ககூடாது என்றனர். தகவல் கிடைத்த திருவாடானை தாசில்தார் ஆண்டி, தொண்டி போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான வேறு இடத்தில் புதைக்க முடிவு செய்யபட்டு, அங்கு புதைக்கபட்டது.