உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பரமக்குடி தடுதலான்கோட்டை கிராமத்தில் நெல் வயல் தினம்

 பரமக்குடி தடுதலான்கோட்டை கிராமத்தில் நெல் வயல் தினம்

பரமக்குடி: பரமக்குடி அருகே தடுதலான்கோட்டை கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் நெல் வயல் தின விழா நடந்தது. தடுதலான்கோட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100 விவசாயிகள் பங்கேற்றனர். மாவட்ட வேளாண் துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பரமக்குடி வேளாண் உதவி இயக்குனர் மனோகரன் வரவேற்றார். பரமக்குடி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஐசக்மானு வேலு, வேளாண் அலுவலர் சீதா லட்சுமி பேசினர். நெல் சாகுபடி செய்ய ரகம் தேர்வு, விதை நேர்த்தி, பயிர் இடைவெளி, களை கட்டுப்பாடு, நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும். மேலும் சமச்சீர் உரமிடுவது, உயிர் உரங்களை பயன்படுத்தும் முறைகள், நீர் மேலாண்மை மற்றும் அறுவடைக்குப்பின் உளுந்து பயிரிடுவது பற்றி தெரிவித்தனர். தொழில்நுட்பம் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் கருணாகரன் நன்றி கூறினார். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சிவகுமார், தங்கவேல் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ