மேலும் செய்திகள்
அரசாள வந்த அம்மன் கோயில் விழா துவக்கம்
23-Jul-2025
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் விழா ஜூலை 21ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மூலவர்கள் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மனுக்கு 18 வகை அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு தீபாராதனை நடந்தன. விழாவின் தொடர்ச்சியாக முக்கிய விழாவான பால்குட விழா, நேற்று நடை பெற்றது. ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசாள வந்த அம்மன் கோயிலை அடைந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்திருந்த பால் குடங்களில் இருந்த பாலில் மூலவர்களுக்கு அபிஷேகம் நடை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.
23-Jul-2025