உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 29 நாட்களுக்கு பின் பாம்பன் ரயில் துாக்கு பாலம் திறப்பு

29 நாட்களுக்கு பின் பாம்பன் ரயில் துாக்கு பாலம் திறப்பு

ராமேஸ்வரம்: 29 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் திறந்து மூடப்பட்டது. பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் ஏப்., 6ல் திறக்கப் பட்டு மக்கள் பயன் பாட்டிற்கு வந்தது. அன்று முதல் புதிய பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலத்தை திறந்து மூடு வதில் சிக்கல் ஏற்பட்டு வந்த நிலையில் கடைசியாக ஆக., 12ல் திறந்த போது 6 மணி நேரத்திற்கு பின் மூடப்பட்டது. இதனால் ரயில் போக்கு வரத்து தாமதம் ஆனது. இந்நிலையில் துாக்கு பாலத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் பணி நடந்தது. இதற்காக துாக்கு பாலம் திறக்கப்படாத நிலையில் 29 நாட்களுக்கு பின் துாக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனை நடந்தது. இதில் பாலத்தை திறந்து அடுத்த 5 நிமிடத்தில் மீண்டும் மூடப்பட்டதால் சோதனை வெற்றி கரமாக இருந்ததாக ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை