உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பனைக்குளம் ராஜமரி கோயில் கும்பாபிஷேகம்

பனைக்குளம் ராஜமரி கோயில் கும்பாபிஷேகம்

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பனைக்குளம் ராஜமரி கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து நேற்று காலை நான்குகால யாகசாலை பூஜைகள் நடந்தது. அங்கிருந்து கடம் புறப்பாடாகி சிவாச்சாரியார்களால் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.பின்னர் மூலவர்கள், பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாராதனையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தலைவர் சவுந்தரராஜன்,, செயலாளர் முத்து, பொருளாளர் தனபாலன், நிர்வாகத்தினரும், கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை