உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பனைக்குளம் ராஜமரி கோயில் யாகசாலை பூஜைகள் துவக்கம்

பனைக்குளம் ராஜமரி கோயில் யாகசாலை பூஜைகள் துவக்கம்

நாளை காலை கும்பாபிஷேகம்தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பனைக்குளம் ராஜமரி கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நாளை(ஜன.20) கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகளுடன் விழா துவங்கியது.மண்டபம் யூனியன் பனைக்குளம் ராஜமரி கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜன.20 காலை 9:45 முதல் 10:30 மணிக்குள் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.தொடர்ந்து மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து பூஜைகள் நடைபெற்றன. மாலையில் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாஹூதி தீப ஆராதனை நடைபெற்றது. இன்று காலை 9:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், கோ பூஜை, தனபூஜை நடக்கிறது. நாளை காலை 9:45 முதல் 10:30 மணிக்குள் கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தலைவர் சவுந்தரராஜன், செயலாளர் முத்து, பொருளாளர் தனபாலன் தலைமையில் கோயில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ