திருப்புல்லாணி கோயிலில் ஏப்.2 - 12 பங்குனி பிரம்மோற்ஸவம்
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 44 வதாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு பங்குனி பிரம்மோற்ஸவ விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஏப்.,2 இரவு அனுக்ஞை பூஜையுடன் விழா துவங்குகிறது. மறுநாள் ஏப்.,3 வியாழக்கிழமை ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் முன்புறமுள்ள கொடிமரத்தில் காலை 10:30 மணிக்கு கொடிபட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.அதனை தொடர்ந்து பத்து நாட்களிலும் சிம்மம், அனுமார், கருட சேவை, புன்னை வாகனம், சேஷ, ஹம்ஸ வாகனம் உள்ளிட்டவைகளில் நான்கு ரத வீதி புறப்பாடு நடக்கிறது. ஏப்., 8ல் திருக்கல்யாண உற்ஸவமும் நடக்கிறது.ஏப்., 11 காலை 9:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட 50 அடி உயர பெரிய தேரில் உற்ஸவ மூர்த்திகள் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க விழா நடக்கிறது. ஏப்., 14ல் உற்ஸவ சாந்தியுடன் நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.