உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காமாட்சி அம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா

காமாட்சி அம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா

கடலாடி: கடலாடியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவ விழா நடந்தது. மார்ச் 31ல் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.ஏப்.,4ல் துள்ளுமா பூஜையும், ஏப்.,7ல் ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் காலை நல்ல காமாட்சி அம்மன், காமாட்சி அம்மனுக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. நேர்த்திக்கடன் பக்தர்கள் கரும்பாலை தொட்டில், அக்னி சட்டி, மாவிளக்கு உள்ளிட்ட பூஜைகளை செய்தனர்.இரவில் பொம்முலு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நல்லண்ணா, பெத்தண்ணா, மாடன், ஒண்டிவீரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பலியிடும் பூஜையும், 21 சாட்டையால் பூஜாரி அடித்து அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை உடலில் சேறு பூசிக்கொண்டு சேத்தாண்டி வேடமிட்ட பக்தர்கள் உலா வந்தனர். ஏராளமான பெண்கள் கோயிலின் முன்பு பொங்கல் வைத்தனர். மாலையில் விளையாட்டு போட்டி, கோலப்போட்டிகள் உள்ளிட்டவைகள் நடந்தது.அம்மனுக்கு பூச்சொரிதல் விழா வும் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு கொடி இறக்கத்துடன் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கவுரவ செட்டியார் மகாஜன சங்கம் மற்றும் கவுரவ இளைஞர் பேரவையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ