மேலும் செய்திகள்
பரமக்குடியில் வணிகர் சங்க தலைவருக்கு அஞ்சலி
13-Sep-2024
பரமக்குடி: அக்.31ல் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் பரமக்குடியில் பஸ் போக்குவரத்தை உறுதி செய்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். பரமக்குடி நகராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு முன் 7 நாட்கள் கடைகள் உட்பட தெருவோர வியாபாரம் களைகட்டும். இந்நிலையில் இந்த ஆண்டு அக்.31 தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக அக்.30ல் தேவர் குருபூஜை விழா நடக்கிறது. பரமக்குடி பகுதியில் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே வியாபாரம் அதிகம் நடக்கிறது. இதனை கருத்தில் கொண்டு பரமக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொருட்கள் வாங்க வரும் மக்கள் மற்றும் ஊழியர்களின் வசதிக்காக டவுன் பஸ் சேவை தடையின்றி வழங்க வேண்டும். மேலும் தீபாவளிக்கு முதல் நாளில் இரவு முழுவதும் வியாபாரம் செய்யும் வகையில் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ் காரைக்குடி மண்டல மேலாளர் உள்ளிட்டோருக்கு, சங்க தலைவர் போஸ், பொதுச்செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் திருநாவுக்கரசு மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
13-Sep-2024