பரமக்குடி சித்திரை திருவிழாமே 12ல் உள்ளூர் விடுமுறை
ராமநாதபுரம்; பரமக்குடி தாலுகா சுந்தரராஜ பெருமாள் சித்திரை கோடை திருவிழா முக்கிய நிகழ்வாக கள்ளழகர் குதிரை வாகனத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியை முன்னிட்டு மே 12 ல் (திங்கள் கிழமை) பரமக்குடி தாலுகாவிற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதனை ஈடு செய்யும் பொருட்டு மே 24 சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. மேலும் பரமக்குடி தாலுகாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் அன்றைய தினம் வழக்கம் போல் இயங்கும். உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் மே 12ல் பரமக்குடி சார்நிலை கருவூலம், அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.