மேலும் செய்திகள்
சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை
25-Oct-2024
பரமக்குடி : பரமக்குடி அருகே சத்திரக்குடி தீயனுார் கிராமத்தில் அருள்பாலிக்கும் கால பைரவருக்கு அஷ்டமி விழா அபிஷேகம் நடந்தது. அப்போது பைரவருக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு துாப தீப ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.பரமக்குடி ஈஸ்வரன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில், எமனேஸ்வரமுடையவர் உட்பட அனைத்து கோயில்களிலும் கால பைரவாஷ்டமி விழாவையொட்டி அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.
25-Oct-2024