பரமக்குடி: காரில் மணல் கடத்திய இருவர் கைது
பரமக்குடி : பரமக்குடியில் இருந்து காரில் மணல் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.பரமக்குடி நகராட்சி மணி நகர் பகுதியில் டவுன் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற ஆம்னி வேனில் 25 மூடை மணல் இருந்தது தெரிய வந்தது.காரில் வந்த பரமக்குடி சந்தை கடை தெரு முரளி 45, வணங்கானேந்தல் கிராமம் செல்வம் 44, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.