உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதிய அரசு பள்ளி கட்டடத்தை திறக்க பெற்றோர் கோரிக்கை

புதிய அரசு பள்ளி கட்டடத்தை திறக்க பெற்றோர் கோரிக்கை

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பொசுக்குடிபட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசுப் பள்ளி கட்டடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.முதுகுளத்துார் அருகே பொசுக்குடிபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு கட்டட வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.28.32 லட்சத்தில் புதிதாக இரண்டு வகுப்பறையுடன் அரசு பள்ளி கட்டப்பட்டு வந்தது. இதனால் தற்காலிகமாக நுாலகத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் அங்கு போதுமான இட வசதி இல்லாமல் மாணவர்கள்,ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பெற்றோர் கூறியதாவது: பொசுக்குடிபட்டி கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் அரசுப் பள்ளி கட்டடம் பணிகள் தற்போது முழுவதுமாக முடிவு பெறாத நிலையில் உள்ளது. இதனால் அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை முழுவதுமாக முடித்து விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை