உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வெட்டுக்குளம் அரசுப் பள்ளிக்கு பஸ் இயக்க பெற்றோர் வலியுறுத்தல்

வெட்டுக்குளம் அரசுப் பள்ளிக்கு பஸ் இயக்க பெற்றோர் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து வெட்டுக்குளத்திற்கு அரசு பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் பஸ்கள் இயக்க கிராமத்தினர் வலியுறுத்தினர்ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே வெட்டுக்குளத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் வெட்டுக்குளம், கலங்காப்புளி, பாரனுார், ஆவரேந்தல், காரங்காடு, ஏ. மணக்குடி, அழியாதன்மொழி, பேரவயல், ஆர்.எஸ்.மங்கலம் உள்பட சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதலாவதாக அபிமன்யூ என்ற மாணவர் 485 மதிப்பெண் பெற்றார்.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கிராம பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து காலை 8:20 மணிக்கு உப்பூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் களங்காப்புளி விலக்கு வழியாக 2 கி.மீ.,ல் உள்ள வெட்டுக்குளம் வரை சென்று உப்பூர் செல்லும் வகையில் இயக்கும் பட்சத்தில், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து வெட்டுக்குளம் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பயனடைய முடியும்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வெட்டுக்குளம் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் காலை மாலை நேரங்களில் பஸ்கள் இயக்க பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ