உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜூலை 8ல் உண்ணாவிரதம் சிறை நிரப்பும் போராட்டம் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் முடிவு

ஜூலை 8ல் உண்ணாவிரதம் சிறை நிரப்பும் போராட்டம் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் முடிவு

ராமநாதபுரம் : தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தம் கோரி ஜூலை 8ல் உண்ணாவிரதம், சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.ராமநாதபுரத்தில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது:2012ல் உடற்கல்வி, கணினி, ஓவியம், என எட்டு பிரிவுகளில் 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் நியமிக்கப்பட்டோம். தற்போது 11 ஆயிரத்து 483 பேர் பணிபுரிந்து வருகிறோம். நாங்கள் வாரத்தில் மூன்றரை நாள் பணிபுரிந்து மாதம் ரூ.12,500 ஊதியம் பெற்று பணியாற்றி வருகிறோம். பள்ளியில் கலைத்திறன், உடற்கல்வி, மற்றும் தொழிற்கல்வி போன்ற துறைகளில் மாணவர்களுக்கு பன்முகத்திறன்களை வளர்த்து மனசோர்வை போக்கி ஆரோக்கியமான கற்றல் மன நிலையை உருவாக்க அயராது பணியாற்றி வருகிறோம். 14 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் எங்களை தமிழக அரசு 2012 தேர்தல் வாக்குறுதி 181 ல் எங்களை பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தனர்.நான்கரை ஆண்டுகளாகியும் அதே தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறோம். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி ஜூலை 8 சென்னை சேப்பாக்கத்தில் அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டமும், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ