பயணியர் நிழற்குடை அமைப்பு
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே பருக்கைக்குடி, கீழத்துாவல் விலக்கில் நிழற்குடை கட்டும் பணி நடக்கிறது. முதுகுளத்துார் அருகே கீழத்துாவல், மேலத்துாவல், கிருஷ்ணாபுரம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் கீழத்துாவல் விலக்கில் காத்திருந்து பஸ்சில் சென்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து நிழற்குடை வசதியில்லாததால் மழை, வெயில் காலங்களில் ரோட்டோரத்தில் உள்ள மரத்தடி நிழலில் காத்திருந்து பயணம் செய்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரோட்டில் புதிதாக பயணியர் நிழற்குடை கட்டும் பணி நடக்கிறது. இதே போன்று முதுகுளத்துார் அருகே பருக்கைக்குடி விலக்கில் புதிதாக பயணியர் நிழற்குடை கட்டும் பணி நடக்கிறது.