உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பராமரிப்பின்றி பயணிகள் நிழற்குடை இருக்கை சேதம்

பராமரிப்பின்றி பயணிகள் நிழற்குடை இருக்கை சேதம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாப்களில் பயணிகள் நிழற்குடைகள் பராமரிப்பின்றி இருக்கைகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க மக்கள் வலியுறுத்தினர்.ராமநாதபுரத்தில் புதுபஸ் ஸ்டாண்ட் அருகே மதுரை ரோட்டில் அரசு போக்குவரத்து பணிமனை எதிரில் கூரிசாத்த அய்யனார் கோயில் பஸ் ஸ்டாப் மற்றும் பட்டணம்காத்தன், சக்கரகோட்டை, சூரன்கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட இடங்களில் பஸ் ஸ்டாப்களில் பயணிகளுக்கு இருக்கை வசதியுடன் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.இவை போதிய பராமரிப்பின்றி சில இடங்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டும் நாற்காலிகள் சேதமடைந்தும், சுவரொட்டிகள் ஓட்டியும் உள்ளனர். இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வரும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே சேதமடைந்த நிழற்குடைகளை கண்டறிந்து அவற்றை சீரமைக்க சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை