வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திருநெல்வேலி டூ சேலம் இன்டர் சிட்டி அதிவிரைவு ரயில் இயக்கினால் தென் மாவட்ட மக்கள் மிகவும் பயனடைவார்கள் வழி மதுரை திண்டுக்கல் பொள்ளாச்சி கோவை வழியாக புதிய இரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கண்டிப்பா டெய்லி vendum
ராமநாதபுரம் : ராமேஸ்வரத்திலிருந்து கோவைக்கு தினசரி ரயில் சேவையை பாம்பன் பால திறப்பு விழாவின் போது பிரதமர் மோடி அறிவிப்பரா என ராமேஸ்வரம் பிராந்திய ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்டு வந்த ராமேஸ்வரம்-- கோவை ரயில் அகலப்பாதை பணிக்காக நிறுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்பு அகலப்பாதை அமைக்கப்பட்ட பின்பு இன்று வரை ராமேஸ்வரத்திலிருந்து கோவைக்கு ரயில் இயக்கப்படாமல் உள்ளது. இது குறித்து கோவையிலிருந்தும், ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல தரப்பினரும் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இன்று வரை அதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை. சேலம் கோட்டத்திலிருந்து ஈரோட்டிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.இந்த ரயிலை ஈரோடு, திருப்பூர், கோவை, பெள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்க வேண்டும். பாம்பன் பால திறப்பு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடி ராமேஸ்வரம்-- கோவை ரயிலை இயக்க அறிவிப்பு வெளியிட வேண்டும், என ராமேஸ்வரம் பிராந்திய ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தினர்.---------
திருநெல்வேலி டூ சேலம் இன்டர் சிட்டி அதிவிரைவு ரயில் இயக்கினால் தென் மாவட்ட மக்கள் மிகவும் பயனடைவார்கள் வழி மதுரை திண்டுக்கல் பொள்ளாச்சி கோவை வழியாக புதிய இரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கண்டிப்பா டெய்லி vendum