பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் வழியின்றி பயணிகள் அவதி
பரமக்குடி : பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தும் பணிகள் நடக்கிறது. அதேவேளையில் பயணிகள் நடப்பதற்கான பாதையை ஒழுங்குபடுத்த வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடியில் ரயில்வே ஸ்டேஷன் கடந்த ஆண்டுகளில் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. தினமும் ஏராளமான பயணிகள் வந்துசெல்கின்றனர். தற்போது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஸ்டேஷனை மேம்படுத்தப்படும் பணிகள் நடக்கிறது. இதில், ஆர்ச், காம்பவுண்ட் சுவர், சிமெண்ட் தளங்கள், லிப்ட் அமைத்தல் மற்றும் ஸ்டேஷன் முகப்பு பகுதி அமைக்கும் பணிகள் நடக்கிறது.இந்நிலையில் பயணிகள் நடந்து செல்ல போதிய வழி ஏற்படுத்தப்படாமல் ஆபத்தான சூழலில் கடக்கும்படி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வழி தெரியாமல் விபத்துக்குள்ளாகும் நிலைஉள்ளது. எனவே பயணிகளின் வசதி கருதி அவர்களின் உடைமைகளுடன் பாதுகாப்பாக நடந்துசெல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.