உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் கழிவு நீரால் பயணிகள் அவதி

சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் கழிவு நீரால் பயணிகள் அவதி

சாயல்குடி: சாயல்குடி பஸ்ஸ்டாண்டில் கழிவு நீர் வழிந்தோடுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.சாயல்குடி பேரூராட்சி பஸ்ஸ்டாண்ட் வணிக வளாகம் அருகே ஏராளமான கடைகள் உள்ளன. ஓட்டல்கள் உள்ளிட்ட கடைகளை ஒட்டிய பகுதிகள் மற்றும் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் வழிந்தோடும் கழிவு நீரால் பயணிகள் தவிக்கின்றனர்.சாயல்குடி பஸ் ஸ்டாண்டிற்கு ராமேஸ்வரம், ராமநாதபுரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, துாத்துக்குடி, திசையன்விளை, திருநெல்வேலி, திருச்செந்துார், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கடலாடி, முதுகுளத்துார், பரமக்குடி, பெருநாழி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்ட் கிழக்குப் பகுதியில் பஸ்கள் நிறுத்துமிடம் அருகே வழிந்தோடும் கழிவு நீரால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியில் கழிவுநீர் வெளியேற்ற நிரந்தரமாக தடை விதிக்கவும், சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ