நிழற்குடை இன்றி பயணிகள் அவதி
திருவாடானை: காடாங்குடி பஸ்ஸ்டாப்பில் நிழற்குடை வசதியின்றி பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று சிரமப்படுகின்றனர். மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை அருகே காடாங்குடி பஸ்ஸ்டாப் உள்ளது. தளிர்மருங்கூர், தண்டலக்குடி, பாகனவயல் உள்ளிட்ட 10 கிராம மக்கள் வந்து செல்கின்றனர். எனவே இந்த பஸ்ஸ்டாப்பில் நிழற்குடை அமைக்க வேண்டும்.