உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

திருவாடானை: திருவாடானை அருகே காடாங்குடி பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று சிரமப்படுகின்றனர்.மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை அருகே காடாங்குடி பஸ்ஸ்டாப் உள்ளது. தளிர்மருங்கூர், தண்டலக்குடி, பாகனவயல், முகிழ்த்தகம், செக்காந்திடல், குணபதிமங்கலம் போன்ற 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வந்து பஸ் ஏறி வெளியூர் செல்கின்றனர். ஆனால் இந்த பஸ்ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.இது குறித்து தளிர்மருங்கூர் ஊராட்சி தலைவர் ராமநாதன் கூறியதாவது: காடாங்குடி பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயில், மழை காலங்களில் நனையாமல் தப்பிக்க கடைகளின் தாழ்வாரங்களில் ஒதுங்கி இருந்து பஸ் வரும் போது ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். திருவாடானை ஊராட்சி ஒன்றியம் சார்பில் பயணிகள் அமர சிமென்ட் இருக்கைகள் பெரும்பாலான பஸ்ஸ்டாப்புகளில் வைக்கபட்டது. ஆனால் காடாங்குடி பஸ்ஸ்டாப்பில் வைக்கவில்லை. நிழற்குடை அமைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை