உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மருந்து கட்ட காத்திருப்பு n அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் n பணியாளர் இல்லாததால் நோயாளிகள் அவதி 

மருந்து கட்ட காத்திருப்பு n அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் n பணியாளர் இல்லாததால் நோயாளிகள் அவதி 

ராமநாதபுரம், : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் மருந்து கட்டும் இடத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இங்கு விபத்தில் சிக்கியவர்கள், தாக்குதலுக்கு ஆளானவர்கள் என தொடர்ந்து நோயாளிகள் இரவு, பகல் பராது வருகை தருகின்றனர். இங்கு நோயாளிகள் காயத்திற்கு மருத்து கட்டுவதற்காக தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் மருந்து கட்டும் பகுதியில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள் பெரும்பாலும் மருந்து கட்டும் இடத்தில் இருப்பதில்லை. நோயாளிகள் காயத்திற்கு மருந்து கட்டுவதற்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. அவசர சிகச்சை பிரிவு வார்டில் இருக்கும் மருந்து கட்டும் பணியாளர்கள் தங்கள் பணிகளை விட்டு, விட்டு வெளியில் சென்று வேறு பணிகளை செய்து வருகின்றனர். இது குறித்து அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. அவசர சிகிச்சை வார்டில் பணிபுரியும் டாக்டர்களும், செவிலியர்களும் கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாக நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் மருந்து கட்டும் பணியாளர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ