உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி தேவை அவதிக்குள்ளாகும் நோயாளிகள்

சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி தேவை அவதிக்குள்ளாகும் நோயாளிகள்

சாயல்குடி: சாயல்குடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அதிகம் பேர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர்.காலை முதல் குறிப்பிட்ட நேரம் வரை ஏராளமான நோயாளிகள் கர்ப்பிணிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் தாகம் தீர்ப்பதற்கு ஏற்ற வகையில் குடிநீர் வசதி செய்து தராததால் சிரமத்திற்குள்ளாகின்றனர்.நேற்று காலை 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி புறநோயாளியாக சிகிச்சை பெற வந்தவர் உயர் அழுத்தம் காரணமாக பரிசோதித்த பின் மாத்திரை உட்கொள்ள டாக்டர் அறிவுறுத்தியதன் பேரில் மாத்திரை பெற்றுக் கொண்டவருக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் எனக் கேட்டுள்ளார்.அதற்கு பணிபுரியும் ஊழியர்கள் இங்கு தண்ணீர் எல்லாம் இல்லை. வெளியே சென்று கடைகளில் சென்று வாங்கி குடித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். எனவே மக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதியும் உள்ள நிலையில் தாகம் தீர்க்க குடிநீர் வசதியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ