மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா விவசாயிகள் ஏமாற்றம்
01-Dec-2024
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூடலுார் கண்மாய் பாசன நீர் வெளியேற்றுவது தொடர்பாக, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்ற சமாதான கூட்டம் நடந்தது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூடலுார் கண்மாய் பாசனத்தில் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பெறுகிறது. சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக தற்போது கண்மாய் முழு கொள்ளளவு எட்டி, மாறுகால் பாய்ந்து வருவதுடன், விளைந்த நெல் வயல்களிலும் மழைநீர் தேங்கி உள்ளன. இதனால், கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரை ஒரு தரப்பினர் வெளியேற்றியதாக புகார் எழுந்தது.அதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக நேற்று, ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் வரதராஜன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், விளைந்த நெல் கதிர்கள் பாதிக்காத வகையில் தண்ணீரை வெளியேற்றவும், கிராமத்தினர் யாரும் தன்னிச்சையாக கண்மாயை உடைத்து சேதப்படுத்தக் கூடாது எனவும் தாசில்தார் எச்சரித்தார்.மேலும், தண்ணீர் வெளியேற்றுவது தொடர்பாக வருவாய்த் துறையினரின் அனுமதி பெற்றே மற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமாதான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில், வட்ட வழங்க அலுவலர் ஹேமாவதி, ஆர்.ஐ., ஆதிலெட்சுமி, வி.ஏ.ஓ., ஆசாருதீன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
01-Dec-2024