பிப்.6ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் பிப்.,6 காலை 11:00 மணிக்கு அரசுத் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. சென்னை கருவூல கணக்கு ஆணையரக ஓய்வூதிய குறைதீர்க்கும் குழு கூடுதல் இயக்குநர் பங்கேற்க உள்ளார். இதில் ஓய்வூதியர்கள் மற்றும் சங்க பிரதிநிதிகள் தங்களது குறைகளை முன் மனுக்களாக ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு என எழுதி கலெக்டர் ,ராமநாதபுரம் என முகவரியிட்டு இரட்டைப்பிரதிகளில் ஜன.,31க்குள் அனுப்பி வைக்க வேண்டும். கடிதம் அனுப்பியர்கள் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.