உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓய்வூதியக்குழு அமைக்கும் திட்டத்தை  அரசு கைவிட ஓய்வூதியர்கள் கோரிக்கை

ஓய்வூதியக்குழு அமைக்கும் திட்டத்தை  அரசு கைவிட ஓய்வூதியர்கள் கோரிக்கை

ராமநாதபுரம் : பழைய ஓய்வூதிய திட்டத்தை அப்படியே அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக ஓய்வூதியக் குழு அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் கூறியதாவது: ஜன.,11ல் சட்டசபை கூட்டத்தில் ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கையின் போது குழு அமைக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசின் அறிவிப்பு வேதனை அளிக்கிறது. குழு அமைப்பது மேலும் காலதாமதத்தை ஏற்படுத்தும். எனவே குழு அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டாம் என்றார். மாவட்டச் செயலாளர் விஜயராகவன், பொருளாளர் முருகேசன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை