மேலும் செய்திகள்
பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தெருமக்கள்
17-Sep-2025
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே மேலச்சிறுபோது விலக்கு ரோட்டில் இருந்து கிராமத்திற்கு செல்லும் ரோடு பல மாதங்களாக சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். முதுகுளத்துார் சிக்கல் ரோடு மேலச்சிறுபோது விலக்கு ரோட்டில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களின் வசதிக்காக அரசு பஸ் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குபவர்களும், வேலைக்கு செல்பவர்களும் 2 கி.மீ., நடந்து வந்து விலக்கு ரோட்டில் காத்திருந்து செல்கின்றனர். இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தார் ரோடு அமைக்கப்பட்டது. அதன் பின் முறையான பராமரிப்பில்லாததால் தற்போது ரோடு ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக இருப்பதால் நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மேலச்சிறுபோது கிராமத்திற்கு புதிதாக ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
17-Sep-2025