உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் கிடைக்காமல் மக்கள் அவதி

பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் கிடைக்காமல் மக்கள் அவதி

கமுதி : கமுதி சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடையால் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் கிடைக்காமல் மக்கள் அவதி அடைகின்றனர்.கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமானோர் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் மற்றும் இணையதளம் பயன்படுத்துகின்றனர். கமுதியில் இரண்டு டவர்கள் உள்ளது. கடந்த சில மாதங்களாக மின்சாரம் தடைபட்டாலோ, பராமரிப்பு வேலைகள் செய்தாலும் அந்த நேரத்தில் பி.எஸ்.என்.எல்., செயலிழந்து நெட்வொர்க் கிடைக்காமல் மக்கள் அவதி அடைகின்றனர். பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யப்பன் கூறியதாவது: கமுதி பகுதியில் ஏராளமானோர் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் பயன்படுத்துகின்றனர். இங்கு மின்சாரம் பராமரிப்பு, மழையால் மின்சாரம் தடைபட்டால் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் செயல்படாது. பேட்டரி இன்வெர்ட்டர் வசதி இல்லாமல் தகவல் தொடர்பு கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். தற்போது ஏராளமானோர் ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் பணியாளர்கள் பி.எஸ்.என்.எல்., மோடம் வேலை செய்யாமல் சிரமப்படுகின்றனர். அரசு அலுவலகங்களில் நெட்வொர்க் கிடைக்காமல் அதிகாரிகள் தவிக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் போலீசாருக்கு பி.எஸ்.என்.எல்., நம்பர் அனைவரும் தொடர்புகொள்ளும் வகையில் வழங்கப்பட்டிருந்த போதிலும் மின்சாரம் இல்லை என்றால் போலீசாரை தொடர்பு கொள்வது சிரமமாக உள்ளது. எனவே கமுதி பி.எஸ்.என்.எல்., டவர்களில் இன்வெர்ட்டர் பொருத்தி மின்சாரம் தடைபட்டாலும் சிக்னல் கிடைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ