உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எம்.எல்.ஏ., கலெக்டரை முற்றுகையிட்ட மக்கள்

எம்.எல்.ஏ., கலெக்டரை முற்றுகையிட்ட மக்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 ஆங்கில வழி கல்வி இல்லை, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இன்றி சிரமப்படுவதாக கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எம்.எல்.ஏ., காதர்பாட்ஷாவை பெற்றோர் முற்றுகையிட்டனர்.ராமநாதபுரத்தில் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இருபாலரும் 8 ம் வகுப்பு வரை படிக்கின்றனர்.அதன் பிறகு படிக்க மாணவர்களுக்கு அரசு உயர் நிலை, மேல்நிலை பள்ளிகள் இல்லை. தனியார், அரசு உதவிபெறும் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.மாணவிகள் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியில் படிக்கின்றனர். அதன் பிறகு பிளஸ் 1, பிளஸ் 2க்கு ஆங்கில வழிக் கல்வி இல்லாததால் தனியார் பள்ளிகளை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து பல முறை கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவு வரை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புத்தகம் வழங்கும் விழாவில் பங்கேற்க கலெக்டர், எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா வந்தனர்.அவர்களை முற்றுகையிட்ட பெற்றோர். நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 1 ஆங்கில வழிகல்வி நடத்த வேண்டும். பள்ளியில் போதுமான வகுப்பறைகள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானம், அடிப்படை வசதிகள் வேண்டும் என வலியுறுத்தினர். பெற்றோரிடம் கலெக்டர், எம்.எல்.ஏ., ஆகியோர் தனி அறையில் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் கூறுகையில், பள்ளி வளாகத்தில் புதிதாக வகுப்பறைகள் கட்டும் பணி ஓரிருவாரத்தில் முடிய உள்ளது.இங்கு படித்த விருப்பமுள்ள மாணவிகளை பிளஸ் 1 சேர்க்க கூறியுள்ளேன். பிளஸ் 1 ஆங்கில வழி கல்வி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என்றார். இதையடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை