உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டியில் பஸ் டிப்போ வருமா 15 ஆண்டாக போராடும் மக்கள்

தொண்டியில் பஸ் டிப்போ வருமா 15 ஆண்டாக போராடும் மக்கள்

தொண்டி, : தொண்டியில் பஸ் டிப்போ அமைக்கக் கோரி 15 ஆண்டுகளாக மனு கொடுத்தும் பயனில்லாததால் மக்கள் அதிருப்தியடைந்தனர்.தொண்டி மக்கள் நல வளர்ச்சி சங்க தலைவர் சுலைமான், செயலாளர் காளிதாஸ், பொருளாளர் அருள்சாமி கூறியதாவது: தொண்டியில் கடந்த 15 ஆண்டுகளாக பஸ் டிப்போ அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தோம். 2009ல் போக்குவரத்து அமைச்சராக இருந்த நேருவிடம் மனு அளித்தோம். எங்களின் கோரிக்கையை ஏற்று தொண்டியில் தனியார் வாடகை கட்டடத்தில் தற்காலிகமாக போக்குவரத்து அலுவலகம் மட்டும் திறக்கப்பட்டது.பஸ் டிப்போ அமைக்க இடம் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதால் 2012 ல் அந்த தற்காலிக அலுவலகம் மூடப்பட்டது. அதன் பிறகு ஸ்டாலினிடம் இக்கோரிக்கையை முன்வைத்தோம். அவர் 2016 மற்றும் 2021 தேர்தல் அறிக்கையில் தொண்டியில் பஸ் டிப்போ அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார்.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இது நாள் வரை பஸ் டிப்போ அமைப்பதற்கான திட்டம் நிறைவேறவில்லை. பஸ்டிப்போ அமைக்க முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் ஆகியோர் தொண்டி அருகே வேலங்குடியில் சர்வே எண் 5 இடத்தை பார்வையிட்டார்கள். அதன் விபரம் இதுவரை தெரியவில்லை.போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் (கும்பகோணம்) இருந்து பஸ் டிப்போ அமைக்க நாங்கள் தயாராக உள்ளோம். கலெக்டர் இடம் ஒதுக்கவில்லை என்று பதில் அளித்தனர். திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கத்திடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். அதற்கு எந்த பதிலும் இல்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ