உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பராமரிப்பு இல்லாத கலெக்டர் அலுவலக வளாகத்தால் அச்சத்தில் மக்கள்! பாம்பு பூரான் என விஷ ஜந்துக்கள் நடமாட்டம்

பராமரிப்பு இல்லாத கலெக்டர் அலுவலக வளாகத்தால் அச்சத்தில் மக்கள்! பாம்பு பூரான் என விஷ ஜந்துக்கள் நடமாட்டம்

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதிநகரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ளது. இங்கு கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி ஒருங்கிணைந்த நீதிமன்றம், டி.ஜ.ஜி., எஸ்.பி., அலுவலகம், விளையாட்டு மைதானம், வேளாண்துறை அலுவலகம், பழைய கலெக்டர் அலுவலக கட்டடத்தில் கல்வித்துறை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஆதார் மையம் என ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. தினமும் 500க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஏராளமான பொது மக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கலெக்டர் வளாகம் தொடர் பராமரிப்பு இல்லாத நிலை தொடர்கிறது. இதன் காரணமாக பழைய கலெக்டர் அலுவலகம், மீன்வளத்துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலம் உள்ளிட்ட அலுவலகங்களின் பின்புறம் மற்றும் காலி இடங்களில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் புதர்களில் இருந்த தேள், பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் சமவெளியை தேடி வந்த வண்ணம் உள்ளன. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் அச்சத்துடன் பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது. அங்கு வரும் பொது மக்களும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே செடி,கொடிகளை அகற்றியும், மழைநீர் தேங்காத வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தை துாய்மையாக பராமரித்து விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு பட்டணம்காத்தான் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை