உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நகராட்சியுடன் சக்கரக்கோட்டை, பேராவூர்ஊராட்சியை இணைக்க மக்கள் எதிர்ப்பு

நகராட்சியுடன் சக்கரக்கோட்டை, பேராவூர்ஊராட்சியை இணைக்க மக்கள் எதிர்ப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியுடன் சக்கரக்கோட்டை, பேராவூர் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.சக்கரக்கோட்டை ஊராட்சி பொதுமக்கள், பொதுநலச்சங்க தலைவர் வெற்றிவேல், துணைத் தலைவர் சாதிக், செயலாளர் கார்த்திக்பாண்டி, ஜமாத் தலைவர் தொண்டு அப்துல் ரகுமான் கொண்ட குழுவினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:சக்கரகோட்டை ஊராட்சியில் 75 சதவீதம் பொருளாதரத்தில் பின்தங்கிய மக்கள் வசிக்கின்றனர். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை நம்பி பலர் உள்ளனர். எனவே ராமநாதபுரம் நகராட்சியுடன் சக்கரக்கோட்டையை இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.இதேபோன்று பேராவூர் ஊராட்சியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மனு அளித்தனர். அதிலும் மேற்கண்டவாறு விவசாயக்கூலிகள் வாழ்கின்றனர். நகராட்சியில் இணைத்தால் அதிக வரி செலுத்த வேண்டியது வரும், நுாறு நாள் வேலை பாதிக்கப்படும். எனவே தொடர்ந்து பேராவூர் ஊராட்சியாக நீட்டிக்க வேண்டும். ராமநாதபுரம் நகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை