உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மக்கள் அவதி :ராமநாதபுரத்தில் 2வது  நாளாக கனமழை: அரசு மருத்துவமனை வார்டில் நீர் புகுந்தது

மக்கள் அவதி :ராமநாதபுரத்தில் 2வது  நாளாக கனமழை: அரசு மருத்துவமனை வார்டில் நீர் புகுந்தது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக இரவு துவங்கி மாலை வரை கனமழை பெய்ததால் மக்கள் அவதிப்படும் நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய நீர் வார்டுக்குள் புகுந்தால் நோயாளிகள் சிரமப்பட்டனர். மாவட்டத்தில் நவ.19 இரவு துவங்கி விடிய விடிய கன மழை பெய்தது. தொடர்ந்து மாலை வரை விடாது மழை பெய்த நிலையில் நேற்றும் பலத்த மழை தொடர்ந்து பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியது.பல இடங்களில் வீடுகளிலும் வெள்ளநீர் புகுந்தது. நேற்று (நவ.21) அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி மாவட்டத்தில் நவ.20 காலை 6:00 மணி முதல் நேற்று (நவ.21) காலை 6:00 மணி வரை 1834.80 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக (மி.மீ.,) ராமேஸ்வரம்- 438, பாம்பன்- 280 மி.மீ., தங்கச்சி மடம்- 338, மண்டபம் - 271, ராமநாதபுரம்-125 மழை பெய்தது. கனமழை காரணமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தை வெள்ளநீர் சூழ்ந்தது. இங்குள்ள அம்மா உணவகத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. மருத்துவ காப்பீட்டு திட்ட நோயாளிகளுக்கான வார்டு எண் 500க்குள் மழை வெள்ளம் புகுந்ததால் அங்கு சிகிச்சை பெற்றவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.பஸ் ஸ்டாண்ட், ரயில்வே பீடர் ரோடு, ராமேஸ்வரம், மதுரை ரோடுகளில் குளம்போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். 2 நாள் மழைக்கு மாவட்டத்தில் 14 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. நேற்று விடுமுறை அளிக்கப்படாத காரணத்தால் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல மாணவர்கள் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை