மேலும் செய்திகள்
மகிளா கிராம சபை கூட்டங்கள்
10-Mar-2025
மார்ச் 29ல் கிராம சபை கூட்டம்
23-Mar-2025
திருப்புல்லாணி : திருப்புல்லாணி மற்றும் கடலாடி, மண்டபம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று கிராம சபை கூட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தில் மக்கள் பிரச்சனை தொடர்பான விஷயங்கள் பேசப்படாமல் பெயரளவில் நடந்ததாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். தன்னார்வலர்கள் கூறியதாவது: பொதுவாக கிராம சபை கூட்டம் குறித்த விஷயங்களை முன்கூட்டியே கிராம மக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் குடிநீர், தெரு விளக்கு, ரோடு வசதி உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்னைகள் குறித்தும், கிராமத்தின் முன்னேற்றங்கள் குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும். எனவே நடக்கவுள்ள கிராம சபை குறித்த விழிப்புணர்வை தனி அலுவலர்கள் மூலம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
10-Mar-2025
23-Mar-2025