உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராமங்களுக்கு போதிய அரசு பஸ்கள் இன்றி தவிக்கும் மக்கள்:

கிராமங்களுக்கு போதிய அரசு பஸ்கள் இன்றி தவிக்கும் மக்கள்:

ஆர்.எஸ்.மங்கலம் : மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு பெயரளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் நீண்டநேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர். எனவே கிராமங்களில் மினி பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.குறிப்பாக, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டாரத்தில் பெரும்பாலான கிராமங்கள் பஸ் வசதியை இல்லாத நிலையில் உள்ளன. இந்த கிராம மக்களிடம் சட்டசபை, லோக்சபா தேர்தல் நேரத்தில் மட்டும் கட்சியினர் வாக்குறுதி அளிப்பதும், வெற்றி பெற்ற பின் அப்பகுதிக்கு நன்றி சொல்லக் கூட செல்வதில்லை என்ற நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட போதிய பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு மினி பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து ராமநாதமடை, புல்லமடை, வல்லமடை, மேலமடை, கொக்கூரணி வழியாக ஆனந்துார் சென்று வர வேண்டும். ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து அத்தானுார், காவனுார், துத்தியேந்தல் வழியாக திருப்பாலைக்குடி சென்று வரும் வகையிலும், சனவேலியில் இருந்து ஆப்பிராய், மேல்பனையூர், கீழ்ப்பனையூர், மாடம்பூர், ஆயிரவேலி வழியாக திருவெற்றியூர் சென்று வரும் வகையிலும், சனவேலியில் இருந்து ஆப்பிராய், கருங்களத்துார், கொசக்குடி, பொன்னியேந்தல், கூடலுார், வடக்கலுார், குருப்புலி, புதுக்குடி வழியாக திருவாடானை சென்று வரும் வகையிலும், மினி பஸ்களை இயக்கி கிராமங்களை ஒன்றிணைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி