கோடரேந்தலில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் சிரமம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கோடரேந்தல் கிராமத்தில் ரோடு, மின் கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. அடிப்படை வசதிகளின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். கோடரேந்தல் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சப்ளை செய்யப்படுகிறது. தற்போது மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் தற்போது வரை எந்த வொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிராமத்தில் ரோடு சேதமடைந்து இருப்பதால் சேறும் சகதியுமாக மாறி உள்ளதால் மக்கள் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். அங்கன்வாடி கட்டடம் சேதமடைந்தும் கட்டடத்தை சுற்றி புல் முளைத்து புதர்மண்டி இருப்பதால் விஷப்பூச்சிகள் தங்கும் கூடாரமாகவும் மாறி வருகிறது. இதனால் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். எனவே கோடரேந்தல் கிராமத்தில் ரோடு, சேதமடைந்த மின்கம்பம், அங்கன்வாடி கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.