உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாய நிலங்கள் அருகே கிரஷர் நிறுவனம் அமைக்க மக்கள் எதிர்ப்பு

விவசாய நிலங்கள் அருகே கிரஷர் நிறுவனம் அமைக்க மக்கள் எதிர்ப்பு

ராமநாதபுரம்: நயினார்கோவில் அருகே ராதப்புளி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் தனியார் கிரஷர் நிறுவனம் அமைக்க அனுமதி வழங்க கூடாது என மக்கள் வலியுறுத்தினர். பரமக்குடி தாலுகா ராதப்புளி, கோபாலபட்டணம், மேலமங்களம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், ஊர்மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், தங்களது பகுதியில் 200 ஏக்கரில் நெல், பருத்தி, மிளகாய் சாகுபடி நடக்கிறது. இந்நிலையில் சிலர் விவசாய பயன்பாட்டிற்கு என தெரிவித்து நிலத்தை மொத்தமாக வாங்கி அங்கு கிரஷர் நிறுவனம் அமைத்து ஜல்லி, தார் கலவை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் கழிவுகள், துாசியால் சுற்றியுள்ள விவசாயநிலங்கள் பாதிக்கப்படும். எனவே கிரஷர் நிறுவனம் செயல்பட கனிமவளத்துறையினர் அனுமதி வழங்கக் கூடாது. அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை