முன்னாள் கடை வியாபாரிகளுக்கு முன்னுரிமை தர கலெக்டரிடம் மனு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகள் ஏலத்தில் முன்னாள் கடை வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வர்த்தக சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள கடைகளுக்கு ஏலம் நடைபெற உள்ளது.இதையடுத்து முதுகுளத்துார் நகர் வர்த்தக சங்கம் சார்பில் முன்னாள் கடை வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் தலைவர் ராமபாண்டியன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.உடன் செயலாளர் ஜஹீபர் அலி,பொருளாளர் சந்திரசேகரன், கவுரவ தலைவர்கள் அழகர்சாமி, கருப்புசாமி உட்பட வியாபாரிகள் பலர் இருந்தனர்.