உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புயலில் உருக்குலைந்த தனுஷ்கோடி மறுசீரமைக்க கலெக்டரிடம் மனு

புயலில் உருக்குலைந்த தனுஷ்கோடி மறுசீரமைக்க கலெக்டரிடம் மனு

ராமேஸ்வரம்: புயலில் உருக்குலைந்த தனுஷ்கோடியை மறுசீரமைக்க வேண்டும் என பாம்பன் ஊராட்சிமுன்னாள் தலைவர் பேட்ரிக் தெரிவித்தார்.இதுகுறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் பாம்பன் முன்னாள் ஊராட்சி தலைவரான ம.தி.மு.க., மாநில மீனவரணி செயலாளர் பேட்ரிக் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :தமிழகத்தின் முக்கிய வணிக நகரமாக 1914 முதல் தனுஷ்கோடி இருந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடியில் இருந்த ரயில்வே ஸ்டேஷன்,கப்பல் துறைமுகம், சர்ச், கோயில்கள், தங்கும் விடுதிகள் இடிந்து சின்னாபின்னமாகியது. அன்று முதல் இன்று வரை அப்பகுதியில் புதிய கட்டமைப்புகள் வராமல் முடங்கி கிடக்கிறது.தொழில்நுட்ப வசதிகள்இல்லாத அக்காலத்தில் தனுஷ்கோடியை மத்திய, மாநில அரசுகள் கைவிட்ட நிலையில் தற்போது தனுஷ்கோடியில் கலங்கரை விளக்கம், புதிய தேசிய நெடுஞ்சாலை, ஓராண்டில் 2 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை என களைகட்டி வருகிறது. எனவே தனுஷ்கோடியை மீண்டும் மறுசீரமைத்து சுற்றுலாவை மேம்படுத்தி மீனவர்களுக்கு அங்கு நிரந்தர வீடுகள் கட்டித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்பன் புயல் காப்பகம் அருகில் உள்ள இடத்தில் மாணவர்கள், இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.பாம்பன் அக்காள்மடத்தில் நடக்கும் வாரச்சந்தையில் ஏராளமானோர் பயன்பெறும் நிலையில் அங்கு கட்டட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !