உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இயற்பியல் துறை பயிலரங்கு 

இயற்பியல் துறை பயிலரங்கு 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் தொழில் வாய்ப்புகள் மற்றும் வளர்ந்து வரும் போக்குகளை வழி நடத்துதல் என்ற தலைப்பில் பயிலரங்கு நடந்தது.முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் சம்பத் வரவேற்றார். துறை தலைவர் பிரபாவதி பேசினார்.சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் காதிர் மொஹிதீன் கல்லுாரி இயற்பியல் துறை தலைவர் ஆயிஷா மரியம், கணிதத்துறை இணைப்பேராசிரியர் சுமதி, வேதியியல் துறை உதவிப்பேராசிரியர் அப்ரூஸ் பானு பேசினர்.தாளாளர் செல்லதுரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா பங்கேற்றனர். இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் லட்சுமணன் நன்றி கூறினார். --------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ