உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இயற்பியல் தேர்வு எளிது; சென்டம் எடுப்பது சிரமம்

இயற்பியல் தேர்வு எளிது; சென்டம் எடுப்பது சிரமம்

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு வினாக்கள் எளிதாக இருந்தது. அதே நேரம் ஒரு மதிப்பெண், 5 மதிப்பெண் பகுதியில் சில வினாக்கள் கடினமாக இருந்தால் நிறைய பேர் சென்டம் எடுப்பது சிரமம் என ராமநாதபுரம் மாணவர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:

அதிக மதிப்பெண்கள் பெறலாம்

ஆர். வெண்மதி ஸ்ரீ, ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் 15 வினாக்களும் எளிதாக இருந்தது. முழு மதிப்பெண்கள் எடுக்கலாம். 2 மதிப்பெண்கள் பிரிவில் ஒரு வினா கடினமாக உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டது.மற்றபடி ஏற்கனவே மாதிரி தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் இடம்பெற்றிருந்தால் தேர்வு எளிதாக இருந்தது. சுமாராக படிப்பவர்கள் கூட 70 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியும்.

புத்தகத்தில் இருந்து வினாக்கள்

எஸ்.கார்த்தீஸ்வரன், செய்யது அம்மாள் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: 70 மதிப்பெண் தேர்வு என்பதால் சிக்கிரமாக தேர்வை எழுதி முடித்து விடைத்தாளை சரிபார்க்க நேரம் கிடைத்தது. 5 மதிப்பெண்கள் பிரிவில் ஒரு பார்முலா வினாவை தவிர மற்றவைகள் எளியமையாக இருந்தன.இரண்டு, மூன்று மதிப்பெண்கள் பிரிவில் கட்டாய வினாக்கள் உள்பகுதியில் இருந்து கேட்டுள்ளனர். மற்றபடி புத்தகத்தின் பின்பகுதி மற்றும் புத்தகத்தில் இருந்து வினாக்கள் கேட்டுள்ளனர். 90 மதிப்பெண்களுக்கு மேல் தராளமாக எடுக்கலாம்.

எதிர்பார்த்தை விட எளிமை

ஆர்.ரிதன்யாஸ்ரீ, சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரெகுநாதபுரம்: 2 மதிப்பெண் பிரிவில் ஒரு முக்கிய வினா மட்டும் கடினமாக இருந்தது.மற்றபடி புத்தகத்தில் படித்தவற்றில் இருந்து வினாக்கள் வந்திருந்தது. ஒரு மதிப்பெண் வினாவில் ஒன்று புத்தகத்தின் உள்ளிருந்து கேட்டுள்ளனர்.தேர்வு எதிர்பார்த்தை விட எளிமையாக இருந்தது. நன்றாக படிப்பவர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறலாம். சிலர் சென்டம் கூட எடுக்கலாம்.

தேர்வு அச்சம் நீங்கியது

எம். முனீஸ்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியபட்டினம்: இறுதி தேர்வான இயற்பியல் பாடம் கடினமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் புத்தகம், 'புக்பேக்'ல் இருந்து படித்திருந்த வினாக்கள் இடம் பெற்றிருந்தால் தோல்வி பயம் நீங்கியது. 70 மதிப்பெண்களில் 50 முதல் 60 மதிப்பெண்கள் வரை எளிதாக பெறலாம். செய்முறை தேர்வு மதிப்பெண் 30 உள்ளதால் இயற்பியல் தேர்வில் தோல்வி அடைய வாய்ப்பே இல்லை. 80க்கு மேல் மதிப்பெண்கள் கிடைக்கும்.

சென்டம் எடுப்பது சிரமம்

ஜெ.சகாயமெல்பா, ஆசிரியர், இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: இயற்பியல் வினாக்கள் மிகவும் எளிமையாக கேட்டுள்ளனர். குறிப்பாக கடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் வந்துள்ளது. ஒரு மதிப்பெண் பிரிவில் 15 வினாக்களில் கட்டாய வினா கேள்வி உள்பகுதியில் இருந்து ஒரு தலைப்பிற்கு இரு பார்முலா வரும்படி உள்ளதால் சற்று கடினம். இதே போல் 5 மதிப்பெண்கள் 5 வினாக்களில் 4 வினாக்கள் கோட்பாட்டு வினாக்களாகவும், ஒன்று மற்றும் ஏ அல்லது பி ஆகிய இரண்டுமே பார்முலா கேள்விகளாக இவ்வாண்டு கேட்டுள்ளனர். இவ்வினாவிற்கு மாணவர்கள் பதிலளிக்க சிரமப்பட்டுள்ளனர். நன்கு படித்த மாணவர்கள் சென்டம் எடுக்கலாம். நிறைய பேர் இயற்பியலில் சென்டம் எடுப்பதும் சிரமம். செய்முறை தேர்வு மதிப்பெண்கள் 30 சேர்த்து 85 முதல் 95 வரை அதிக மாணவர்கள் எடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி